எதை பற்றியும் கவலை படாத கூட்டம் ஒன்று உண்டு..மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிலர் அந்த கூட்டம்...
1990களுக்கு முன், காந்தி என்றொருவர் இந்தியர்களின் வாழ்கையில் இருந்தார்...வறுமை அதிகம் உள்ள நம் நாட்டில் அதிக பணமும் அதை வெளிகாட்டும் விதமாக பந்தா காட்டுவதும் தொண்ணூறுகளுக்கு முன்னர் மிக குறைவாகவே இருந்தன... காந்தியின் எளிமை, சிக்கன வாழ்வு போன்ற கொள்கைகள் சிறிதளவாவது அப்போது ஒட்டிக் கொண்டிருந்தன...
அதற்க்கு பிறகு நடந்த பொருளாதார மாற்றத்தில் இந்த கூட்டத்திற்கு வேலை கிடைத்தது...வித்தியாசமாக வாழ ஆரம்பித்தார்கள்.. இவர்களது வாழ்க்கை முறையை "consumerist" என சிலர் கூறுவார்கள்..நான் hedonist என்பேன்..இவர்கள் வீட்டில் உள்ள சுவரில் தொங்கும் LCD, LED TVகளில் ஸ்டிக்கர் கூட பிய்க்க படாமல் இருக்கும்..எல்லாருக்கும் அதன் brand தெரிய வேண்டும் என்பதற்காக..
பல அரசு அலுவலக கேன்டீன்கள் குளிர்பானங்கள் விற்காததை ஒரு கொள்கையாகவே பின்பற்றுவார்கள்... ஆனால் இந்த கூட்டத்தினரின் குழந்தைகள் கூட கோக் குடித்து வளர்ந்தன...
2008-09 களில் இந்த கூட்டத்தில் பலருக்கு வேலை போனது..அப்போது ஹிந்து நாளிதழில் ஒரு அம்மணி, "விவசாயிகள் கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்வதை பற்றி அரசாங்கம் கவலை படுகிறது, எங்கள் கூட்டத்திலும் சிலர் வீட்டுக்கடன் , கார் கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்கிறார்கள். அவர்களை பற்றியும் கவலை படுங்கள் என்று கண்ணீர் மல்க எழுதினார்..பாவம், பிழைக்க வாங்கிய கடனுக்கும், சொகுசுக்கு வாங்கிய கடனுக்கும் கூட அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை...
இவர்கள் அலுவலகங்களிலும் contract labourers இருக்கிறார்கள், எந்த ஒரு social security benefitஸ் இல்லாமல் வேலை செய்பவர்கள், அவர்கள் சம்பளம் கம்மி, பணி நிரந்தரம் இல்லை, விடுமுறை எடுத்தால் சம்பளம் கட் ஆகும்...இந்த contract labourers நிலையை எண்ணி இந்த கூட்டத்தினர் "உச்" கொட்டி கூட நான் கேள்வி பட்டது இல்லை..
இவர்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் எந்த தொழிலாளர் நலச் சட்டமும் செல்லாது...அதனால் இந்த கூட்டத்திற்கு trade unions கிடையாது... திறமை அடிப்படையில்(??) வேலை மற்றும் சம்பளம் என்று மார் தட்டும் இவர்கள் அலுவலகங்களில் "இட ஒதுக்கீடும்" கிடையாது...
இப்படி செய்யும் செயல்களிலும், எண்ணத்திலும், எந்த ஒரு சமூக அக்கறையும் இல்லாத இந்த கூட்டம், திடீர் என்று kisan babu rao உண்ணாவிரத போராட்டதிற்கு (அதாங்க நம்ப அண்ணா ஹசாரே) ஆதரவு தெரிவித்தார்கள்...அரசு செய்யும் ஊழலை பற்றி பேசிய இவர்களில் பலர், sathyam software செய்த ஊழலை(corporate misgovernance?) பற்றி பேசியது இல்லை..இன்றும் பல நிறுவனங்கள் sathyam software செய்யும் கோல்மால்களை செய்து கொண்டுதான் இருக்கின்றன.இவர்கள் கண்டும் காணாதது போல் அந்த நிறுவனங்களில் வேலை செய்வார்கள்...
இந்த கூட்டத்தில் பலருக்கு இப்போது வேலை போய்விட்டதாம்...இந்த கூட்டத்திலும் உண்மையான சமூக அக்கறை உள்ளவர்கள் இருக்கிறார்கள். தங்கள் அலுவலகங்களில் நடக்கும் அநியாயங்களை பற்றி வருந்தி புலம்பியவர்கள், இடப் ஒதுக்கீடு (reservation) பற்றி மட்டும் பேசமால் ,எல்லா சமூக பிரச்சனை பற்றியும் கவலை பட்டவர்கள்.. அவர்களுக்காக மட்டும் இல்லாமல், வேலை பறி போன எல்லாருக்காகவும் நான் வருந்துகிறேன்..
இப்போதைய வேலை பறிப்பு, நட்டத்தினால் நடக்கவில்லை. லாபத்தை அதிகரிப்பதற்காக முதலாளித்துவ கொள்கையின் அடிப்படையிலேயே வேலை பறிப்பு நடந்துள்ளது...மிகவும் தவறான செயல்..
--வோட்டாண்டி

No comments:
Post a Comment