சமீப காலமாக பேச்புகில் உலா வரும் படம் ஒன்று. சிகரட், மது பெண்கள் அருந்துவதால் இந்திய 2020 வல்லரசு ஆக முடியாது என்ற நல்ல கருத்தை பரப்பும் படம். வல்லரசு என்பதற்கும் மது , சிகரட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று இவர்கள் விளக்கவில்லை. வல்லரசாக இவர்கள் கருதும் நாடுகளில்(அமெரிக்கா , ஜப்பான் ) பெண்கள் மது அருந்துவதில்லையா?? பிறகு என் இவர்களுக்கு பெண்கள் புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் எதிர்கிறார்கள் ?
இதற்க்கு நாம் சற்று பின்னோக்கி செல்ல வேண்டும்.. பாரதி தன் மனைவியை வீட்டுக்கு வெளியே அழைத்து வந்த போதும் இதே சமூகம் அவரை தூற்றியது. என்ன காரணம்? ஆண்களின் ஆதிக்கம் கலங்கி விடும் என்பதற்காக. அப்போது, ஆண்கள் தெருக்களில் நின்று, மரபுகளை உடைத்த பெண்களை ஏசினார்கள்.. இன்று அவர்களது வாரிசுகள் இன்டர்நெட்டில் பேஸ்புக் வழியாக ஏசுகிறார்கள்.. இதனால் பெண்கள் சிகரட் பிடித்து தான் சம நிலையை அடைந்திட வேண்டும் என்று நான் வாதிடவில்லை. ஆனால் இவர்களது வாதம் என்ன? ஆண்கள் என்ன தவறு வேணாலும் செய்யலாம் பெண்கள் செய்ய கூடாது.. அது தவறா இல்லையா என்பதை பிறகு பார்போம். தீபவாளி அன்று மது விற்பனை உயர்வதை இந்த அளவுக்கு அவர்கள் கண்டிக்கவில்லை ஏன்? பொது இடங்களில் ஆண்கள் சிகரட் புடிப்பதையோ , மது குடித்து கும்மாளம் அடிப்பதையோ இவர்கள் படம் பிடித்து போடவில்லை ஏன்? வீடு போய் சேராமல் பாதி வழியில் மட்டைஆகி ரோட்டில் கிடக்கும் ஆண்களை காட்டி இதுவா நாம் கண்ட வல்லரசு கனவு என்று இவர்கள் கேட்கவில்லை ஏன்? இவர்கள் கூறும் வல்லரசு என்ன?
மேற்கு நாடுகள் பல வல்லரசாக இருக்கின்றன . அங்கே பெண்கள் அங்களுக்கு சமமாக நடத்த படுகிறார்கள். அங்கே பெண்களின் பெற்றோர்கள் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை கைபேசியில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று விசாரிபதில்லை. பெண்களை இருட்டுவதற்குள் வீட்டுக்கு வர வேண்டும் என்று சட்டங்கள் போடுவதில்லை. நான் காட்டும் மாப்பிளையிடம் தான் நீ கழுத்தை நீட்ட வீண்டும் என்று வற்புறுத்துவதில்லை. திருமணதிற்கு பிறகு வேலையை விட வேண்டும் என்ற நிர்பந்தங்கள் இல்லை. திருமணம் பிடிக்கா விட்டால் கல் ஆனாலும் கணவன் என்று இருக்கும் கட்டாயம் இல்லை. எப்பொழுது குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். இப்படி பட்ட வல்லரசாக இந்தியா 2020 இல் ஆக முடியுமா? நிச்சயம் 2120 இலும் முடியாது.
இவர்களுக்கும், மது அருந்தும் பெண்களை பார் உள்ளே சென்று தாக்கிய ராம சேனைக்கும் ஒரே ஒரு வித்யாசம் தான். அந்த வானர சேனை வன்முறையை கையாண்டார்கள். ஆனால் அதை ஒளிபரப்பிய செய்தி சேனல்கள், நாகரீகமாக அந்த பெண்களின் முகத்தை மறைத்தே அந்த காட்சிகளை ஒளிபரப்பின. ஆனால் பேச்புகில் இவர்கள் பரப்பும் பெண்களின் முகத்தை இவர்கள் மறைக்கவில்லை. உண்மையில் யார் குற்றவாளிகள்? இவர்கள் வாதிடலாம் நாங்கள் உள்ளதை தான் பரப்பினோம் என்று? மற்றவர் புகைப்படத்தை உபயோகிபதர்க்கு உங்களுக்கு யார் உரிமை குடுத்தார்கள்? நாளை உங்கள் புகைப்படத்தை ஆண் கக்கூஸ் வாசலிலும், உங்கள் மனைவி அல்லது சகோதரி புகைப்படத்தை பெண் கக்கூஸ் வாசலிலும் ஓட்டினால் நீங்கள் அப்போது இந்த வாதத்தை ஒப்பு கொள்வீர்களா? நாங்கள் உள்ளதை தான் போட்டோம் என்று?
பெண்கள் சிகரட் பிடிக்க கூடாது என்று சொல்லும் இந்த தலைமுறையின் பாட்டன்கள் பெண்களை சமையலறையை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. படித்தால் மனைவி கணவன் சொல்லை கேட்க மாட்டாளாம், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? பெண் குழந்தை மீது செலவு செய்தால் அதில் புகுந்த வீட்டுக்கு தான் லாபம். பிறகு அவளுக்கு எதற்கு படிப்பு? 90 களில் பெண்களை வேலைக்கு செல்ல அனுமதிதார்கள்.. ஆனால் அதன் மூலம் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்ததா? வீட்டில் இவர்கள் செய்யும் வேலைகளை மாற்றி அமைத்து வேலை சந்தையில் அதை female jobs என்று நிர்ணயித்தார்கள்.
ஆரம்ப பள்ளிகூடங்களில் வாத்தியார் வேலை- கைகுழந்தைகளை வீட்டில் பராமதிப்பதர்க்கு பதிலாக பள்ளி கூடங்களில்..
receptionist வேலை, airhostess ,பர்சனல் secretary என்று ஆண்களுக்கு சேவை செய்து அவர்களை சார்ந்திருக்கும் வேலைகள். இதுவா பெண்களுக்கு நீங்கள் குடுத்த சுதந்திரம்? ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்க பட்ட வேலைகளை பெண்கள் செய்ய ஆரம்பிக்கும் போது எதிர்ப்புகள் கிளம்புகின்றன.சம்பாத்தியம் ஆண்மகன் லட்சணம் என்பதை மாற்ற பெண்கள் வேலைக்கு சென்ற போது எதிர்ப்புகள் கிளம்பின. அதே போல் தான் பெண்கள் சிகரட் பிடிப்பதை எதிர்க்கும் பிரசாரமும். எந்த பெண்ணும் தன் குடிகார கணவனை தவிர, வேறு எந்த ஆண் குடிப்பதையோ கும்மாளம் அடிப்பதையோ நினைத்து வருந்தியது கூட இல்லை. ஆண்களுக்கு மட்டும் ஏன் இந்த கொலை வெறி? இது சமூக அக்கறை பிரச்சாரமா, அல்லது பெண்களை அடக்கும் பிரச்சாரமா? சிகரட் பிடிப்பது மது அருந்துவது , இவை எதுவும் இந்திய சட்டம் குற்றம் என்று கூறவில்லை. இவை ஒருவரது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள். மற்றவரது தனிப்பட்ட வாழ்கையை எட்டிபார்த்து விமர்சிக்கும் ஆண்வர்கமே!! எங்களுக்கும் தெரியும் சிகரட் பிடிப்பது சரியா தவறா என்று. நீங்கள் பொத்தி கொண்டு உங்கள் வேலையை பாருங்கள்.
முதல் பதிவா ...?
ReplyDeleteவாழ்த்துகள் ... வாருங்கள் ... வளருங்கள்.
முதல் பதிவே ‘புகைகிறதே’!!!
word verification எதற்கு?
தமிழ் மணத்தில் சேரவில்லையா?
ReplyDelete