Tuesday, December 20, 2011
Tuesday, December 6, 2011
தமிழர்களுக்கு மனித உரிமை இல்லையா?
மனித உரிமை ஆணையம், முல்லை பெரியார் அணை விவகாரத்தில் latest ஆக மூக்கை நுழைத்திருக்கிறது. கேரளா MPகள் மனித உரிமை ஆணையத்திர்க்கு அளித்த மனுவில் முல்லை பெரியார் அணையை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகள் கேரள மக்கள் வாழ்வில் விளையாடி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரு மாநிலங்களுக்கு இடையே இருக்கும் தண்ணீர் பிரச்சனை மனித உரிமை ஆணையத்திடம் சென்றிருப்பது இதுவே முதல் முறை..
இதன் மூலம் மனித உரிமையின் விளக்கத்தை ஆணையம் தெளிவாக கூறியுள்ளது
மூன்று வருடம் முன்பு அதே அணையின் நீர் மட்டதை உயர்த்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்த போது கேரள சட்ட மன்றம் கூடி நீர் மட்டதை உயர்த்த முடியாது என்று கூறியது. தீர்பை நிறைவேற்றாததால் தேனி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பாதிப்படைந்தது. இது மனித உரிமை மீறல் அல்ல. குறைந்த பட்சம் தீர்ப்பை நிறைவேற்றாததை சுப்ரீம் கோர்ட் அவமதிப்பு வழக்காக எடுத்திருக்கலாம். சுப்ரீம் கோர்ட் அதையும் செய்யவில்லை. இது ஒன்றும் புதிதல்ல. காவேரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. கர்நாடக அரசாங்கம் அதை நிறைவேற்றவில்லை. இதுவும் கோர்ட் அவமதிப்பு வழக்காக மாறவில்லை.
தமிழர்கள் கூடங்குளம் அணு உலை எங்கள் உயிருக்கு ஆபத்து என்று நாளை மனித உரிமை ஆணையத்திடம் மனு அளித்தால் அதை ஆணையம் ஏற்க்குமா?
அணையின் பாதுகாப்பு மனித உரிமை கீழ் வரும் பொழுது அணு உலை பாதுகாப்பும் வருமா??
அணை பாதுகாப்பானது என்று பல குழுக்கள் கூறிய பின்பும் இந்த மனுவை மனித உரிமை ஆணயம் அனுமதித்துள்ளது என்றால் என்ன அர்த்தம்?
தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டு கொன்ற போது மனித உரிமை ஆணையம் ஏன் அமைதியாக இருந்தது. மீனவர்கள் ஆணையத்தை நாடவில்லை என்பதற்காகவா? தனது suo-motu power மூலம் பல வழக்குகளை சுயமாக எடுத்து விசாரிக்கும் சக்தி உள்ள ஆணையம் மீனவர்கள் விவகாரத்தில் ஏன் மூக்கை நுழைக்கவில்லை?
தமிழர்களுக்கு மனித உரிமை இல்லையா? அல்லது தமிழர்கள் மனிதர்களே இல்லையா?

Subscribe to:
Posts (Atom)